ராசிபுரம் சங்கமேஸ்வரர் சொர்ணாம்பிகை கோவிலில் பிரதோஷ விழா..
Rasipuram King 24x7 |17 Aug 2024 2:24 PM GMT
ராசிபுரம் சங்கமேஸ்வரர் சொர்ணாம்பிகை கோவிலில் பிரதோஷ விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சட்டமன்ற அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ இராஜகணபதி, சொர்ணாம்பிகை சமேத சங்கமேஸ்வரர், முருகன், ஐயப்பன், சனீஸ்வரர், காலபைரவர், துர்கை கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சங்கமேஸ்வரர் நந்தி பகவான் சொர்ணாம்பிகை சாமிக்கு பல்வேறு முக்கிய அபிஷேகம் மான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சொர்ணாம்பிகை சமேத சங்கமேஸ்வரர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இப்பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story