சங்ககிரி காவல்துறை சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டி....
சேலம் மாவட்டம், சங்ககிரி காவல்துறையின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்காக நடத்தப்பட்டு வரும் மனமகிழ்மன்றத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றது. சுதந்திரதினவிழாவினையொட்டி சங்ககிரி காவல்துறையின் மனமகிழ்மன்றத்தின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மனமகிழ்மன்றத்தின் பயிற்சியாளர் மணிகண்டன், சமூக ஆர்வலர் சரவணன், சிறுவர், சிறுமிகள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
Next Story




