கன்னங்குறிச்சியில் புது ஏரி நிரம்பியது

கன்னங்குறிச்சியில் புது ஏரி நிரம்பியது
உபரிநீர் வழிந்தோடுகிறது.
சேலம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் கன்னங்குறிச்சி புதுஏரி முக்கியமானதாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்வழிப்பாதையில் கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் புது ஏரிக்கு வந்தவண்ணம் இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து நேற்று காலை 6 மணிக்கு தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் கொத்துக்காரன் ஓடை வழியாக மூக்கனேரிக்கு வந்தது. ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். புதுஏரி நிரம்பி உபரிநீர் வழிந்தோடுவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் ஏரியை பார்ப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கிடா வெட்டி வழிபாடும் நடத்தப்பட்டது.
Next Story