சேலம் டூர் ஆபரேட்டர் அசோசியேசன் சார்பில்

சேலம் டூர் ஆபரேட்டர் அசோசியேசன் சார்பில்
விழிப்புணர்வு கருத்தரங்கு
சேலம் டூர் ஆபரேட்டர் அசோசியேசன் சார்பில் சேலம் டிராவல் மார்ட்-2024 என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு கிராண்ட் எஸ்டான்சியா ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட சுற்றுலா அதிகாரி வினோத் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு டிராவல் ஏஜெண்டுகள் பங்கேற்றனர். இதில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா மேம்பாடு குறித்தும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சியால் சேலம் மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரும் காலங்களில் கணிசமாக உயரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் டூர் ஆபரேட்டர் அசோசியேசன் தலைவர் சரவணன், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ராஜேஷ் கண்ணா, சரண்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story