சேலத்தில் மகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்
Salem (west) King 24x7 |18 Aug 2024 1:38 AM GMT
தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கலைவாணி (40). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை வீரபத்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் அவரது 2-வது மகள் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் தந்தை, மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த வீரபத்திரன் நேற்று முன்தினம் மதுபானம் அருந்தி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story