பரமத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பரிக்க முயன்ற இருவர் கைது.

பரமத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பரிக்க முயன்ற இருவர் கைது.
பரம்தி வேலூர் அடுத்து பரமத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பரிக்க முயன்ற இருவர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பரமத்திவேலூர், ஆக.18- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மறவாபாளையம் பிரிவு சாலை அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கீழ மளிகை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). லாரி டிரைவர். இவர் வெள்ளிக்கிழமை இரவு பரமத்தி அருகே உள்ள மறவா பாளையம் பிரிவு சாலை அருகே லாரியை நிறுத்தி விட்டு லாரி உரிமையாளர் மறவாபாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி வருகைக்காக எதிர் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனியாக லாரியில் இருந்த சரவணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது சரவணன் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் மற்றும் லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் ஓடிவந்து கத்தியை காட்டி மிரட்டிய இருவரையும் பிடித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (23), கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சிந்தாமணிபட்டி அருகே உள்ள விராலிபட்டியைச் சேர்ந்த இளையராஜா என்கிற பைகான் (26) என்பது தெரியவந்தது. அதனையடுத்து பரமத்தி போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய ஹரிஹரன் மற்றும் இளையராஜா என்கிற பைகான் ஆகிய இருவரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story