மாரத்தான் போட்டி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஸ்பான்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து.
Karur King 24x7 |18 Aug 2024 10:22 AM GMT
மாரத்தான் போட்டி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஸ்பான்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து.
மாரத்தான் போட்டி நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய ஸ்பான்சர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து. டைமன்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று காலை, கரூரை அடுத்த காந்திகிராமம் பகுதியில், மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பொதுவாக இது போன்ற போட்டிகள் நடத்துவது என்றால் நிறைய செலவுகள் உள்ளடங்கியதாக இருக்கும். போட்டி நடத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதிலும் சிரமமான சூழல் இருக்கும். இதனை புரிந்து கொண்டு, ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பிலும், போட்டி நடத்துவதற்கு தேவையான பொருளாதார ஒத்துழைப்பு வழங்கினால்தான் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த இயலும். அந்த வகையில் மாரத்தான் போட்டி நடைபெற ஸ்பான்ஸராக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு இன்று காந்திகிராமம் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் முத்துக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் ஸ்பான்ஸர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story