மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கரூர் வட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கரூர் வட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கரூர் வட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில், கரூர் வட்ட பொதுக்குழு கூட்டம், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்த்தி ஓட்டலில் உள்ள அழகம்மை மஹாலில் கரூர் வட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில பொருளாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர் வீராசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் திவ்யா, உள்ளிட்ட மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தின் நிறைவில், மின்துறை பொது துறையாக தொடங்கிட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாத்திட வேண்டும், அதிக வேலைப்பளு திணிப்பதை தடுத்திட வேண்டும், தொழிலாளர்கள் சுயமரியாதை காத்திட வேண்டும், இழந்த சலுகைகளை திரும்ப பெற்றிட வேண்டும், அனுமதிக்கப்பட்ட காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story