பரமத்தி வேலூர் வல்லப கணபதி கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால விழா.

X
Paramathi Velur King 24x7 |18 Aug 2024 7:09 PM ISTபரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள வல்லப கணபதி கோயிலில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலில் விஷ்ணுபதி புன்னிய கால விழா.
பரமத்திவேலூர், ஆக.18- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள வல்லப கணபதி கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதணை நடைபெற்றது. செட்டியார் தெருவில் உள்ள வல்லப கணபதி பானலிங்க சிவ விஷ்ணு கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பரமத்திவேலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுந்தரராஜ பெருமாளை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லப கணபதி கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
