நகரமைப்பு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

நகரமைப்பு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ஓய்வு நாளன்று பணியிடை நீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்
தமிழ்நாடு நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிகுமார், துணை செயலாளர் ஜெயந்தி, பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல தலைவர் ஜெயவர்மன், செயலாளர் இயற்கைபிரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நகரமைப்பு ஆய்வாளர், அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பணிமாறுதலுக்கு கவுன்சிலிங் அமைக்க வேண்டும். பணி ஓய்வு நாளன்று, பணியிடை நீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story