சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலர் சங்க கூட்டம்

சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலர் சங்க கூட்டம்
கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அனைத்து பெண் அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். செயளாளர் இருதயஜோதி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர் சுசீலா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். மாவட்டத்தைச் சேர்ந்த கிராம, பகுதி நேர மற்றும் சமுதாய சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் துணை சுகாதார நிலையத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் உள்ள 216 துணை சுகாதார நிலையங்களில் 36 துணை சுகாதார நிலையங்கள் காலி பணியிடங்களாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக காலியாக உள்ள துணை சுகாதார நிலைய பணியிடத்தை நிரப்பவேண்டும். ஜூம் மீட்டிங்கை தினமும் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் மாலை 5:00 மணிக்கு மேல் தொடர்ந்து நடத்துவதை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கர்ப்பிணிகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய கிராம சுகாதார செவிலியர்களை வரச்சொல்வதை தவிர்க்கவேண்டும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் களப்பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story