ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் .

ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் .
சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல் செய்வதால் கடும் போக்குவரத்து
தொடர் விடுமுறை முடிந்து ஒரே நாளில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பதால்செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவு வாயிலில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் . சுதந்திர தின விழா மற்றும் வார விடுமுறை என்பதால் அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி சென்ற நிலையில் நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுப்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவு பகுதியாக உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி சென்னை நோக்கி வருகின்றனர். இந்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் ட்ராக் நெரிசலானது ஏற்பட்டுள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே இது போன்ற வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் சுங்கச்சாவடியில் கட்டாய வசுல்களை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story