அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சில்மிஷம் கல்வி அதிகாரிகள் விசாரணை
Tiruchengode King 24x7 |19 Aug 2024 9:49 AM GMT
அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சில்மிஷம் கல்வி அதிகாரிகள் விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த விட்டம் பாளையம் பகுதியில்உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில்வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி இவர் கடந்த பல வருடங்களாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார் தற்போது அந்த ஆசிரியர் தங்களிடம் சட்டையை கழட்டி சொல்லியது சட்டைக்குள் கைவிட்டு துலாவுவது, பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிடுவது,தொடையில் கிள்ளுவது என சில்மிஷங்களில் ஈடுபடுவதாக கூறி பிளஸ் டூ பயோ மேத்ஸ் (BIO MATHS ) பாட பிரிவில் பயின்று வரும் ஏழு மாணவர்கள் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் என்பவரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜோதி கண்மணி, மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பொறுப்பு விஜயன், கிராம நிர்வாக அலுவலர் கோபால கிருஷ்ணன், ஆகியோர் இன்று மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் எனவும் அதன் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆசிரியர் வேலுச்சாமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை குழு தரப்பில் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது பெற்றோர்கள் யாரும் இருக்கக் கூடாது எனவும் மதியம் வரை விசாரணை நடைபெறும் என்பதால் மதியத்திற்கு மேல் வந்து மாணவர்களை அழைத்துச் செல்லலாம் என பெற்றோர்களை பள்ளியை விட்டு அனுப்பி விட்டனர். விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடைபெறும் இடமும் தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் பள்ளிக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டு நிற்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story