தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பேட்டி
Thirukoilure King 24x7 |19 Aug 2024 10:05 AM GMT
பேட்டி
எங்களை விட பெரிய கட்சி என்றால் திமுக, அதிமுக தான் த.வெ.க இல்லை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆலூர், பாடியந்தல் உள்ளிட்ட கிராமங்களில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் புதிய கட்சி கொடியை ஏற்றி அங்குள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருக்கோவிலூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசன் கலந்து கொண்டு ஆலூர் கிராமத்தில் 80 அடி உயரமுள்ள கம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; 2026இல் தமிழக வெற்றி கழகம் அழைத்தால் தேமுதிக செல்லுமா என்ற கேள்விக்கு? தேமுதிக 2005இல் துவங்கப்பட்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருக்கும்போது 2006ல் 67 கவுன்சிலர்களை உருவாக்கியது. அதேபோல் 24.25 சதவீதம் ஓட்டு வாங்கி உள்ளோம், அதன் பிறகு 2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வாக்கு சதவீதம் வாங்கிய கட்சி, அதன் பிறகு 2011 இல் நாங்கள் இருக்கும் இடம்தான் ஆட்சி அமைக்கும் என்ற காரணத்தினால் அதிமுக திமுக எங்களை அழைத்தார்கள். மக்களின் நலன் கருதி அன்றைய சூழ்நிலையை கருதி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக தேமுதிக அமர்ந்து. அதனால் நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை கழகத்தின் பொதுச்செயலாளர்; மாவட்ட செயலாளர்கள், ஏன் அடிப்படை தொண்டன் கூட முடிவு செய்வான். விஜய் அழைத்தால் அப்படி என்றால், நாங்கள் தான் அழைக்க வேண்டும். எங்களை விட பெரிய கட்சி என்றால் திமுக, அதிமுக தான் எங்களை பொறுத்தவரை வேறு யாரையும் அப்படி பெரிய கட்சியாக நாங்கள் நினைப்பது இல்லை என தெரிவித்தார்.
Next Story