சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு.

சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு.
சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புஞ்சை புகலூர், ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மனோஜ் குமார் வயது 20. இவர் ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 11 மணி அளவில், மதுரை - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பழைய சுக்காலியூர் ரோடு பகுதியில் உள்ள கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, அதே சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சீனிவாசா காலனி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் நவீன் குமார் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், மனோஜ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த மனோஜ் குமாருக்கு தலை மற்றும் இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு மனோஜ் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த மனோஜ் குமாரின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மனோஜ் குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story