விவேகானந்தாபார்மசி,நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரிகளின் விளையாட்டு விழா
Tiruchengode King 24x7 |19 Aug 2024 11:18 AM GMT
விவேகானந்தாபார்மசி,நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரிகளின் விளையாட்டு விழா
விவேகானந்தா பார்மசி, நர்சிங் , அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரிகளின் சார்பில் விளையாட்டு விழா நடந்தது . இவ்விழாவை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி திரு.சொக்கலிங்கம், பாராமெடிக்கல் இயக்குநர் (கேப்டன்) டாக்டர். கோகுலநாதன், ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பாலகுருநாதன் திறன் மேம்பாட்டு இயக்குநர் குமரவேல் அவர்கள் சேர்க்கை நிர்வாகி சவுண்டப்பன் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர். ராஜ்குமார் , செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சுமதி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சைலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஜீ. முருகானந்தம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த விளையாட்டு விழாவினை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜேந்திரன் விளையாட்டுப் போட்டிகளை ஒலிம்பிக் ஜோதியேற்றி துவக்கி வைத்தார். மேலும் அவர் பேசும் போது மாணவ மாணவிகள் இன்று மேற்கொண்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்வு என்பது ஏதோ ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை போன்று கம்பிரமாக இருந்தது என்று வாழ்த்தினார். மேலும் மாணவ மாணவிகளிடம் விளையாட்டின் முக்கியத்துவம் ,உடல் ஆரோக்கியம் குறித்து பேசினார். மாணவிகள் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் இந்த விளையாட்டு விழாவில் மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ரிலே ரேஸ்,கொக்கோ, வாலிபால், மற்றும் உள் விளையாட்டுப் போட்டிகளான செஸ் மற்றும் கேரம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், வெற்றி கோப்பைகள்,பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் ஆசிரியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியின் சிறப்பாக நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். கீதா நன்றியுரை கூறினார். விளையாட்டு விழா ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குனர்கள் செல்வி,சிங்காரம் , டாக்டர் .தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story