மாலப்பட்டி பிரிவு- டூவீலரை வேகமாக இயக்கியதால், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று கீழே விழுந்த கணவன் மனைவி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |19 Aug 2024 12:02 PM GMT
மாலப்பட்டி பிரிவு- டூவீலரை வேகமாக இயக்கியதால், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று கீழே விழுந்த கணவன் மனைவி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
மாலப்பட்டி பிரிவு- டூவீலரை வேகமாக இயக்கியதால், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று கீழே விழுந்த கணவன் மனைவி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கம்மா நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் வயது 34.இவரது மனைவி மலர்கொடி வயது 29. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தோகைமலையில் இருந்து பாளையம் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள மாலப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, அந்த சாலையில் கரூர் மாவட்டம், குருணை குளத்துப்பட்டி, மேலணை, கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி வயது 56 என்பவர், அவருக்கு சொந்தமான டூவீலரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். மேலும், வாகனத்தை வளைத்து, நெளித்து ஓட்டியதால், டூ வீலரை ஓட்டிக் கொண்டிருந்த சுந்தர் எங்கே தனது வாகனம் மீது மோதி விடுமோ என்ற எண்ணத்தில் தனது வாகனத்தை திடீரென பிரேக் இட்டார். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து கணவன்-மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராமன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுந்தர் அளித்த புகாரின் பேரில், டூ வீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான ரெங்கசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர் துறையினர்.
Next Story