மருத்துவர் நகரில் அதிகப்படியாக கடனாளி ஆனதால், வீட்டை விட்டு வெளியேறியவர் மாயம். கணவனை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார்.
Karur King 24x7 |19 Aug 2024 2:07 PM GMT
மருத்துவர் நகரில் அதிகப்படியாக கடனாளி ஆனதால், வீட்டை விட்டு வெளியேறியவர் மாயம். கணவனை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார்.
மருத்துவர் நகரில் அதிகப்படியாக கடனாளி ஆனதால், வீட்டை விட்டு வெளியேறியவர் மாயம். கணவனை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு, மருத்துவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் வயது 42. இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் தேவைக்கும் அதிகமாக கடன் வாங்கியதால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் இருந்து வந்தார். இதனிடையே ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று காலை 7 மணி அளவில், வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், தொழில் ரீதியான அவரது நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தும், உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கணேசன் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால், அவரது மனைவி புஷ்பலதா வயது 39 என்பவர், காவல் நிலையத்தில் தனது கணவனை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், கணேசன் அதிகப்படியாக கடன் பெற்றதும், திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் இருந்ததும் தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான கணேசனை தேடி வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story