செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: இன்று விசாரணை
Villuppuram King 24x7 |20 Aug 2024 4:54 AM GMT
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: விழுப்புரத்தில் இன்று விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை செம்மண் குவாரியில் 2016-11 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012-இல் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா். தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் மட்டும் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமாா் ஆகிய 4 போ் ஆஜராகவில்லை.தொடா்ந்து, கூடுதலாக சாட்சிகளைச் சோ்த்து விசாரிக்க அனுமதிகோரி அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான பரிசீலனையை மேற்கொள்வதற்காக, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக.20) ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
Next Story