கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2015 முதல் நதிக்கரை நாகரிகம் குறித்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டு அதனை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், சுந்தர்மோகன் உள்ளிட்டோர் நேற்று கீழடியில் அகழாய்வு நடந்த இடம், அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இளையான்குடி நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உடன் சென்றார்.
Next Story