பிராமண சமுதாய மக்கள் பூணூல் மாற்றும் வைபவம்
Sivagangai King 24x7 |20 Aug 2024 7:11 AM GMT
சிவகங்கை டி.புதூரில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிரமாணா்கள் பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் வசித்து வரும் பிராமண சமுதாய மக்கள் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பங்கேற்ற பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது. ஆவணி மாதத்தில் பவுா்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில்தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரா்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இதை ஆவணி அவிட்டம் முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது. பூணூல் அணியும் பழக்கம் உள்ளவா்கள், குறிப்பாக பிராமண சமுதாயத்தினா் அதிகாலையிலேயே குளித்து நீா்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சோ்ந்து புரோகிதா் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வாா்கள். இது ஹயக்ரீவ ஜயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. திகாலை 3.07 மணி தொடங்கி, மறுநாள் (ஆகஸ்டு 20) அதிகாலை 1.09 வரை பவுா்ணமி திதி உள்ளது. திங்கள்கிழமை பிரம்ம முகூா்த்த வேளையில் நடைபெற்ற பூணூல் மாற்றும் வைபவத்தில் திரளானோா் கலந்து கொண்டனா். சிவகங்கை நகரில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்பட்டன.
Next Story