திருப்பத்தூரில் தனித்தீவாக காட்சியளிக்கும் ஆரிப் நகர்!

திருப்பத்தூரில் தனித்தீவாக காட்சியளிக்கும் ஆரிப் நகர்! பூரான் பாம்பு எல்லாம் போவதாக சிறுவன் ஆவேச பேச்சு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனித்தீவாக காட்சியளிக்கும் ஆரிப் நகர்! பூரான் பாம்பு எல்லாம் போவதாக சிறுவன் ஆவேச பேச்சு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 23 ஆவது வார்டு ஆரிப்நகரில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுவாகவே சேரும் சகதியுமாக காணப்படுகிறது அப்பகுதியில் உள்ள கால்வாயை சரிவர தூர் வாரப்படாமல் இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கழிவு நீரும் ஆரிப் நகர் பகுதியிலேயே தங்கி விடுகிறது. எனவே ஆரிப் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கார்வாயை சரியாக கூறுவனினால் இங்கிருந்து சென்று மாட பள்ளி வரை இந்த காலில் நீர் கால்வாய் முடிவடைகிறது எனவே இந்த கழிவு நீர் கால்வாயை தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் லேசான மழை காரணமாக ஆரிப் நகர் பகுதியில் சாக்கடையுடன் கழிவுநீர் கலந்து ஆரிப் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது இதன் காரணமாக இந்த ஆரிப்நகர் ஒரு தனித்தீவாகவே காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தங்களுடைய குடியிருப்புகளில் பூரான் மற்றும் பாம்புகள் அனைத்தும் உள்ளே நுழைந்து விடுகிறது இங்கு வாழவே பயமாக உள்ளது எனவே இந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தான் என்று குறிப்பிடத்தக்கது.
Next Story