திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா திரானோர் சாமி தரிசனம்
Tirupathur King 24x7 |20 Aug 2024 8:40 AM GMT
திருப்பத்தூரில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா திரானோர் சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து கும்மிப்பாட்டு பாடி ஊர்வலமாக சென்ற திரளான பக்தர்கள்! திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் ராமக்கா பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ ஞான விநாயகர் ஆலயத்திலிருந்து ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு பெண்கள் மற்றும் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கும்மி பாடலுடன் பம்பை இசை முழங்க மேல தாலங்களுடன் பிரதான சாலை வழியாக கும்மி பாட்டு பாடி ஊர்வலமாக திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் சென்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வந்து அடைந்தது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முளைப்பாறை எடுத்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர் இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
Next Story