தமிழக முதல்வர் திறந்து வைத்த கால்நடை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

தமிழக முதல்வர் திறந்து வைத்த கால்நடை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.
தமிழக முதல்வர் திறந்து வைத்த கால்நடை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழகத்தில் நடைபெற்று வந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி பகுதியில் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கால்நடை மருத்துவமனையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவமனை பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கால்நடை மருத்துவமனையை சுற்றி பார்த்து, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் வடிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கஸ்தூரி, கடவூர் வட்டாட்சியர் இளம் பாரதி, கால்நடை பராமரிப்பு மண்டல துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் மேரி, கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், ரேணுகாதேவி, மணிகண்டன், செந்தில், கோமதீஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story