வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள்
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2025-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளிலும் 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் நடைபெற உள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி தொடங்கப்பட உள்ளது. பின்னர் வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல், வாக்காளர் புகைப்பட அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் போன்ற பணிகள் 20.8.2024 முதல் 18.10.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டு 29.10.2024 முதல் 28.11.2024 தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 6.1.2025 அன்று வெளியிடப்படும். எனவே, இன்று முதல் 18.10.2024 வரையிலான காலத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் வருகைபுரிந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story