திருநங்கையை காரில் அழைத்து சென்று நகை, செல்போன் பறிப்பு
Salem (west) King 24x7 |20 Aug 2024 10:39 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் 5 ரோடு ஸ்டேட் பாங்க் காலனி பகுதி சேர்ந்தவர் திருநங்கை கனிஷ்கா (வயது 24). இவர், புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அந்த வழியாக காரில் வந்த 2 பேர், கனிஷ்காவை காரில் அழைத்து சென்றனர். சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு என்ஜினீரிங் கல்லூரி பகுதியில் காரை நிறுத்தி விட்டு திருநங்கையிடம் இருந்த ¾ பவுன் நகை, செல்போனை பறித்துக் கொண்டு 2 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்து திருநங்கை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story