சின்னாம்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
Karur King 24x7 |20 Aug 2024 11:25 AM GMT
சின்னாம்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
சின்னாம்பட்டியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாவத்தூர் ஊராட்சியில் உள்ள சின்னாம்பட்டி பகுதியில் பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பகுதி நேர நியாய விலைக் கடையை எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி குத்துவிளக்கு ஏற்றி வைத்து இன்று துவக்கி வைத்தார். மேலும், அந்த கடையில் பொருள்கள் வாங்கும் பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், கடவூர் ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், கடவூர் வட்டாட்சியர் இளம் பாரதி, கடவூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, கூட்டுறவு ஆய்வாளர் கோமதி, உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story