அரசு போட்டித்தேர்வுகளுக்கான ஊக்கப்பயிற்சி பட்டறை
Tiruchengode King 24x7 |20 Aug 2024 11:44 AM GMT
அரசு போட்டித்தேர்வுகளுக்கான ஊக்கப்பயிற்சி பட்டறை
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான ஊக்கப்பயிற்சி பட்டறை நடைபெற்றது. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்கு இரண்டாமாண்டு இளநிலை வணிகவியல் (நிதி சந்தையியல் பகுப்பாய்வு) துறையைச் சார்ந்த மாணவி எஸ். ஜனனி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பகுத்தறிவு மற்றும் வங்கி பயிற்சியாளர், வராண்டா ரேஸ் லேர்னிங் சொல்யூஸ்சன்ஸ், சேலம், திரு. ஏ, மகேந்திர வர்மா அவர்கள் கலந்துகொண்டு பணியாளர் தேர்வு மையம், ரயில்வே ஆட்சேர்ப்பு மையம் மற்றும் வங்கியின் மூலம் அரசு தேர்வுகளை எவ்வாறு விண்ணப்பிப்பது என்றும், போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெறுவது பற்றியும் மேலும் வேலை வாய்ப்பு பெற்ற பின் அவ்வேலையில் உள்ள படிநிலைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இதில் கே.எஸ்.ஆர் அகாடமி போட்டித்தேர்வு இயக்குனர் முனைவர் ஏ.எம். வெங்கடாசலம் மற்றும் ஒருங்கினைப்பாளர்கள் எஸ்.ஹரிஹரன், முனைவர் ஏ.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக இரண்டாமாண்டு இளநிலை வணிக பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த மாணவி எம். தீபிகாஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.
Next Story