ஜெனரல் ஒர்க்ஸ் மகாசபை மாநாடு நடைபெற்றது

ஜெனரல் ஒர்க்ஸ்   மகாசபை மாநாடு நடைபெற்றது
பள்ளிபாளையத்தில் ஜெனரல் ஒர்க்ஸ் சங்கத்தின் மாவட்ட மகாசபை மாநாடு நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். தொழிற்சங்க அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் 33-வது மாவட்ட மகாசபை கூட்டமானது ஞாயிறன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தினுடைய மாவட்ட தலைவர் வி.சங்கரன் தலைமை தாங்கினார். மகாசபை மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் எம்.அசோகன், சங்க மாவட்ட செயலாளர் கே.மோகன், சங்க மாவட்ட பொருளாளர் சரவணன்வேல், மாவட்ட உதவி தலைவர் எம்.எஸ்.மாதவன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட குழு தலைவராக வி.சங்கரன், செயலாளராக கே.மோகன், பொருளாளராக சரவணன், துணைத்தலைவராக தாமோதரன், துணை செயலாளராக எம்.எஸ்.மாதவன் உள்ளிட்டோர் அடங்கிய மாவட்ட குழு புதிதாக தேர்வு செய்யப்பட்டது.. இந்த கூட்டத்தில் தீர்மானங்களாக ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில், முறையாக கிடைக்காததால், ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இவற்றை மாதா மாதம் உரிய தேதியில் வழங்கிட வேண்டும். நலவாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் . காவேரி ஆர்.எஸ் பகுதியில் ,ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீர் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . வசந்த நகர் மயானத்தை பராமரித்து வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது... மகா சபை மாநாட்டின் நிறைவாக மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சி.சௌந்தரராஜன் நன்றி உரையாற்றினார்.
Next Story