தீர்க்கக்குட ஊர்வலத்தில் பம்பை மேளம் முழங்க ஒட்டகம், காளை, குதிரை பங்கேற்பு.

சேலம் மாவட்டம் மடத்தூரில் எழுந்தருளியிருக்கும்அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்க்கக்குட ஊர்வலத்தில் பம்பை மேளம் முழங்க ஒட்டகம், காளை, குதிரை நடனமாட்டத்துடன் பெண்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் மடத்தூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.  அதற்காக தீர்த்தக்குடம் ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது..  முன்னதாக பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்களை எடுத்துக்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மடத்தூர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து அங்கிருந்து ஒட்டகம், குதிரைகள், காளை மாடுகளுடன், காவடி ஆட்டம் பம்பை மேளம் முழங்க சுவாமிகளுடன் இளம்பிள்ளை சாலை, வலையசெட்டியூர், மடத்தூர் வழியாக அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அருள்மிகு ஸ்ரீ தீபாஞ்சம்மன் சாமியை வழிப்பட்டு சென்றனர்
Next Story