இலவச வீட்டு மனை பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்
Komarapalayam King 24x7 |20 Aug 2024 2:11 PM GMT
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒரு வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் நடத்தும் விளிம்பு நிலையில் உள்ள 148 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் துரைசாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கடந்த ஒரு வருட காலமாக வீட்டுமனை பட்டா கோரி போராட்டம் ஈடுபட்டு வந்த தட்டாங்குட்டை மற்றும் பல்லக்காபாளையம் பகுதியில் சேர்ந்த 148 குடும்பத்தினருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தப் போராட்டத்தில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்றும் குடிநீர் சாக்கடை மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தியும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிசாமி குருகியில் தட்டாக்குட்டை பல்லக்காபாளையம் பகுதியில் சேர்ந்த விளிம்பு நிலையில் உள்ள 148 குடும்பத்தினருக்கு கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக கடந்த பிப்ரவரி மாதம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீட்டுமனை நிலங்கள் வழங்க அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது ஆனால் இதுவரை விளிம்பு நிலையில் உள்ள கிராம மக்களுக்கு ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசிக்கும் சூழ்நிலையில் போதிய வருவாய் இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தங்களுக்கு பட்டா வழங்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்
Next Story