விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி

விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி
சிவகங்கை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் வைகை உபவடி நிலப் பகுதி திட்டத்தில் விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை புத்தாக்கத்திட்டம் (TNIAMP)-PHASE-4 கீழ் வைகை உபவடி நிலப்பகுதி திட்டத்தில் விரிவாக்க அலுவலருக்களுக்கான பயிற்சி சிவகங்கை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 20.08.24 நடைபெற்றது.  இப்பயிற்சியினை சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர்(பொ) லட்சுமி பிரபா, தலைமையேற்று துவக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைசாமி முன்னிலை வகித்தார். முதல் நாள் பயிற்சியாக சென்னை, Multi Disciplinary Project Unit (MDPU) 2 Center For Excellence in Change Management (CEC) நிலையத்தின் Maser trainer கூடலிங்கம் கலந்து கொண்டு விரிவாக்கப் பணியாளர்களுக்கான பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் இரவிசங்கர் வேளாண்மை உதவி இயக்குநர், மானாமதுரை மற்றும் சிவகங்கை, இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் என 30 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மானாமதுரை வேளாண்மை அலுவலக அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசன திட்டம்) செல்வி, வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) காளிமுத்து, வேளாண்மை அலுவலர்கள் செல்லத்துரை, ஜைனுல் பௌஜியா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
Next Story