தவறான தகவலை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஏஓ அளித்த புகாரில் வழக்கு பதிவு.
Karur King 24x7 |20 Aug 2024 3:06 PM GMT
தவறான தகவலை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஏஓ அளித்த புகாரில் வழக்கு பதிவு.
,தவறான தகவலை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஏஓ அளித்த புகாரில் வழக்கு பதிவு. தாந்தோணி மலை கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், தாந்தோணி மலை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள், பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 17, 19, 20-ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மனுக்கள் பெற்று பணம் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தவறான செய்தி பகிரப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மகளிர் உரிமைத்தொகை பெற மனுவை அளித்தனர். தமிழக அரசின் நட்பு இருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தவறான தகவலை பரப்பிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story