தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமான வேடந்தாங்கலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமான வேடந்தாங்கலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமான வேடந்தாங்கலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு
செங்கல்பட்டு மாவட்டம்,வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயக நல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தீண்டாமை கடைபிடிக்காத,நல்லிணக்கத்துடன் வாழும் , ஒரு ஆதிதிராவிடர் கிராமமாக, வேடந்தாங்கல் ஊராட்சி, தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. அதன்படி, வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், தீண்டாமை கடைப் பிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு பரிசு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2023 - 24 ல்,வேடந்தாங்கல் ஊராட்சிக்கு, மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு, குடிநீர் வசதி செய்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதை வசதி மேம்பாடு செய்தல், பள்ளி கட்டடம் சீரமைத்தல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மைய கட்டடம் கட்டுதல் மற்றும் புதிய விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏதேனும், பணிகளை செய்து கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருகை சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிடும் வகையில் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசு பெற்றதற்கு உறுதுணையாக இருந்த காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம் எல் ஏ, காஞ்சிபுரம் எம். பி. ஜி.செல்வம், ஒன்றிய கழக செயலாளர் ஜி. தம்பு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story