அரசு பள்ளியில் மாணவியை கடித்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை
Sangagiri King 24x7 |20 Aug 2024 4:35 PM GMT
சங்ககிரி:அரசு பள்ளியில் மாணவியை கடித்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவியை பள்ளியின் வளாகத்திலேயே நாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு.. பாதிக்கப்பட்ட மாணவி சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை ... சங்ககிரி அருகேயுள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.. இதனிடையே சங்ககிரி புள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் சத்யா தம்பதியினரின் மகள் எட்டாம் வகுப்பு மாணவி ஹரிணி ஸ்ரீ காலையில் பள்ளிக்கு சென்ற போது பள்ளியின் வளாகத்திலேயே சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியது. இதனை அறிந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனிடைய பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் கூறும்போது நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருவதாகவும் பள்ளியின் வளாகத்திலேயே தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருவதாகவும் போதிய பாதுகாப்பு இல்லாததால் மாணவிகளை நாய்கள் கடித்து குதறி வருவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.
Next Story