சிவகங்கை குடிநீருடன் கழிவு நீர் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி 20 வது வார்டில் உள்ளது நக்கீரர் தெரு. இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வரக்கூடிய நகராட்சி குடிநீர் கழிவு நீர் கலந்து வருகிறது. நீர் முழுவதும் துர்நாற்றம் வீசி மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் மக்கள் கூறும்போது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்தப் பகுதியில் வரக்கூடிய நகராட்சி குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. குடிப்பதற்கு ரூ.30 விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் இந்தத் தண்ணீரை வடிகட்டி சுட வைத்து குடிக்கும் சூழல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அச்சம் உள்ளது.
Next Story

