சிஇஓ அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.
Next Story