நெல்லையில் தாய் மகள் தற்கொலை

நெல்லையில் தாய் மகள் தற்கொலை
தற்கொலை
நெல்லை அருகே தாழையூத்தையடுத்த தென்கலத்தில் தாய் பகவதி(75),மகள் மாலா(38) ஆகியோர் இன்று தற்கொலை செய்து கொண்டார்கள்.பகவதியின் மூத்த மகன் முத்துகிருஷ்ணன்(48) மாரடைப்பால் நேற்று இரவு இறந்த நிலையில் அந்த துக்கம் தாளாமல் தாய்-மகள் இருவரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.மாலா கணவரை பிரிந்து தாய் பகவதி உடன் வாழ்ந்து வந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மூன்று பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story