பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்தவர் கைது.
Paramathi Velur King 24x7 |21 Aug 2024 7:54 AM GMT
பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்தவரை கைது செய்து கடைக்கு சீல்.
பரமத்திவேலூர், ஆக.21- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவரை கைதுசெய்து கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்தி வேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வேலூர் போலீசார் மற்றும் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் பெட்டிக்கடையில் வைத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்து கடைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story