பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் தடகள போட்டி நடந்தது
Salem (west) King 24x7 |21 Aug 2024 8:30 AM GMT
800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில் வாழப்பாடி மைய குறு அளவிலான தடகள போட்டி இன்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மோகன் தொடங்கி வைத்தார். இதில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. 100, 200, 400, 600, 800, 1,500 மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டப்பந்தம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 44 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடம் பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல் 2 இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
Next Story