ஆம்பூர் அருகே போலி மருத்துவர் கைது

ஆம்பூர் அருகே போலி மருத்துவர் கைது
ஆம்பூர் அருகே உரிய மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உரிய மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது. மருத்துவ அலுவலர் புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உரிய மருத்துவம் படிக்கமால் நபர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரதுறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணகி அவர்களின் உத்தரவின் பேரில் மருத்துவர் யோகேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர், வெங்கடசமுத்திரம் பகுதியில் ஆய்வு மேற்க்கொண்ட போது, அப்பகுதியில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பயாஸ் அஹமது (25) என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல், தனது தந்தை இறந்த நிலையில், அதே மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக அவரிடம் இருந்த மருந்து பொருட்களை மருத்துவ அலுவலர்கள் பறிமுதல் செய்தனர் அதனை தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், பயாஸ் அஹமதுவை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Next Story