வல்லத்தில், செய்த வேலையை முழுமையாக முடிக்க கூறியதால் தகராறு. கொலை செய்யும் நோக்கோடு தாக்கிய நபர் கைது.

வல்லத்தில், செய்த வேலையை முழுமையாக முடிக்க கூறியதால் தகராறு. கொலை செய்யும் நோக்கோடு தாக்கிய நபர் கைது.
வல்லத்தில், செய்த வேலையை முழுமையாக முடிக்க கூறியதால் தகராறு. கொலை செய்யும் நோக்கோடு தாக்கிய நபர் கைது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பில்லா பாளையம் அருகே உள்ளது வல்லம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 70. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சக்திவேல் வயது 45 இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகாமையில் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்று வந்தது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பைப்லைன் அமைக்கும் இடம் சேரும் சகதியுமாக மாறியது. இந்த பைப் லைன் அமைக்கும் பணியில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மேட்டு மகாதானபுரம், மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் வயது 45 என்பவர் ஈடுபட்டு வந்தார். பைப்லைன் அமைக்கும் இடம் சேரும் சகதியமாக இருந்ததால், ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் அதன் தொடர்ச்சியாக உள்ள மற்றொரு இடத்தில் பணியை மேற்கொள்ள சென்று விட்டார். அப்போது முருகன் தனது வீட்டின் அருகாமையில் செய்த பணியை முழுமையாக முடித்து விட்டு செல்லுமாறு கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் ரமேஷுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முருகன் மகன் சக்திவேல், இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ரமேஷ், வேலை செய்து கொண்டு இருந்த மண்வெட்டியால் சக்திவேலை தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் வலது முன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தகாத செயலில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து, அவரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Next Story