முருகன் நகரில் டூவீலர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
Karur King 24x7 |21 Aug 2024 12:11 PM GMT
முருகன் நகரில் டூவீலர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
முருகன் நகரில் டூவீலர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி அருகே உள்ள சம்பாறைபுதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் வயது 75. இவர் ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பள்ளப்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள முருகன்நகர் ஸ்ரீ சபரி ஐயங்கார் பேக்கரி அருகே செல்லும்போது, எதிர் திசையில் அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம், புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், கருப்பகவுண்டர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பண்ண கவுண்டரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம்,கரூரில் உள்ள ராமன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பணக்கவுண்டர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆனந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story