அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பாடியநல்லூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் பள்ளியில் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் வகுப்புக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி ஒரே நாளில் 303 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வராததை கண்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்
பாடியநல்லூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் பள்ளியில் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் வகுப்புக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி ஒரே நாளில் 303 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வராததை கண்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் லலிதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தார். கடல் நீர் உட்புகுவதால் மீஞ்சூர் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் உவர்ப்பு நீராக மாறி உள்ளதால் அதற்கு மாற்றுத் தீர்வாக நாள் ஒன்றுக்கு ஐந்து எம் எல் டி குடிநீரை கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திலிருந்து வழங்க நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். விஜயநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் வாணிபக் கழக குடோனில் நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் அரிசி பூச்சிகள் அதிக அளவு இருந்ததால் அதனை பராமரிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் வெள்ளையன் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் அறிவழகன் ஆகிய மூவரை அழைத்து கண்டித்தார் மேலும் அரிசி பருப்பு உள்ளிட்டவர்களில் புழு பூச்சிகள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் பணி யிடை நீக்கம் செய்வேன் என மூவரையும் ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்தார்.
Next Story