குள்ளம்பட்டியில் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
Karur King 24x7 |21 Aug 2024 12:39 PM GMT
குள்ளம்பட்டியில் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
குள்ளம்பட்டியில் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகு ராஜன் வயது 32 .இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மதுரையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது காரில் வந்து கொண்டிருந்தார். இவரது கார்,கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குள்ளம்பட்டி பகுதியில் உள்ள பூங்கொடி டீக்கடை எதிரே வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் இட்டதால், பேருந்து மீது மோதுவதை தவிர்க்க அழகுராஜனும் தனது காருக்கு திடீரென பிரேக் இட்டு உள்ளார். இந்த நேரத்தில் காரின் பின்னால் வந்த கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, மலைக்கோவிலூர், லிங்கத்துப் பாறை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் வயது 35 என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், அழகு ராஜன் ஓட்டிச் சென்ற காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அன்பழகனுக்உ வலது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அழகு ராஜன் அளித்த புகாரின் பேரில் டூ வீலரை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story