காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு

பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
வலியை மறித்து தடுப்புச் சுவர் கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற 30ஆம் தேதி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் அலுவலகத்தில் சகுனி பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் அருகே உள்ள சகுனி பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் நாச்சான் என்ற நாச்சி வசித்து வருகிறார். இவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு அரசால் பட்டா கொடுத்து இதுநாள் வரையில் வசித்து வருகின்றனர். பட்டா எண் 483 எண்ணில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறேன். ஜூலை மாதத்தில் தனது வீட்டில் உள்ள பெண்களுக்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்கள் இல்லாத நேரத்தில் எதிர் தரப்பைச் சேர்ந்த நபர்கள் தனது வீட்டின் புது வழித்தடத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டி விட்டார்கள்.நாங்கள் வேலைக்கு சென்று விட்டதால் சுவர் கட்டியது தெரியவில்லை. நாங்கள் செல்லும் வழியில் சுவர்கள் எழுப்பி விட்டார்கள். இதுகுறித்து கடந்த மாதம் 29.07.24 இந்த தேதியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும்,கடந்த 2 ஆம் தேதி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே அந்த சுவரை அகற்றாவிட்டால் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Next Story