சிவகங்கை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

சிவகங்கை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி
மானாமதுரையில் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பானை, கூஜா சமையலுக்கு தேவையான பொருட்கள், சிலைகள், முளைப்பாரி ஓடு, கஞ்சி கலயங்கள், நவராத்திரியில் வைத்து வழிபடும் கொலு பொம்மைகள் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்காக அரை அடியிலிருந்து 10 அடி வரையிலான களிமண்ணாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. செப்.7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களாகவே மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் ரூ. 10 முதல் ரூ. 300 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கோயில்கள் மற்றும் பொது இடங்கள்,தெருக்களில் வைத்து வழிபடக்கூடிய 3 அடியிலிருந்து 10அடி வரையிலான விநாயகர் சிலைகளும் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Next Story