ஆதிதிராவிட மக்களை அவமரியாதை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : திருமா
Tiruvallur King 24x7 |22 Aug 2024 2:00 AM GMT
கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு எட்டியம்மன் கோவில் வழிபாட்டு பிரச்சனையில் ஆதிதிராவிட மக்களை அவமரியாதை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் திருமா
கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு எட்டியம்மன் கோவில் வழிபாட்டு பிரச்சனையில் ஆதிதிராவிட மக்களை அவமரியாதை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் சிறு புழல்பேட்டையில் யூணிக் தனியார் ஆயில் உற்பத்தி தொழிற்சாலை புதிதாக அமைக்கப்பட்டது அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸன் மௌலானா ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் . அப்போது கட்சி பிரமுகரின் குழந்தைக்கு இசையராணி என பெயர் வைத்து இனிப்பு வழங்கினார் கூட்ட நெரிசல் காரணமாக போதிய காற்று வசதி இல்லாமல் குழந்தை ஆழத் தொடங்கிய நிலையில் குழந்தைக்கு அவரே விசிறிவிட்டு காற்றோட்டம் ஏற்பட செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வழுதலம்பேடு எட்டியம்மன் கோவிலில் விவகாரத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வழிபட தடை விதித்து பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை நடத்தி ஆதி திராவிட மக்கள் கோவிலில் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனைமுதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோஸ்ட்டி பூசல் உட்கட்சி விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார் தனியார் தொழிற்சாலை திறப்பு விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Next Story