கிருஷ்ணராயபுரத்தில் துவரை நிலக்கடலை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கிருஷ்ணராயபுரத்தில் துவரை நிலக்கடலை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
கிருஷ்ணராயபுரத்தில் துவரை நிலக்கடலை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியில், துவரை 800 ஹெக்டேர், நிலக்கடலை 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் துவரை, நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி துவரை காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு 288.10 ரூபாய், நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு 628.35 ரூபாய் என பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள். பயிர் காப்பீடு செய்வதற்க்கு கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களின் நகல்களுடன், அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யலாம் எனவும், விபரங்களுக்கு மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story