ஆத்துப்பாளையம் அணை நீர் நிரம்பி வருவதால் விரைவில் அணை திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு.

ஆத்துப்பாளையம் அணை நீர் நிரம்பி வருவதால் விரைவில் அணை திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு.
ஆத்துப்பாளையம் அணை நீர் நிரம்பி வருவதால் விரைவில் அணை திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு. கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீர் நிரம்பியது. இதனைத் தொடர்ந்து பாசத்திற்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருகிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 25.978 அடியாக உள்ளது. விரைவில் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளதால், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த அணை மூலம் க.பரமத்தி, கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 19,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story